tnpsc group 2 geography questions answer
tnpsc group 2 geography questions answers & group 2 geography study materials
http://www.tnpsctamil.in/2013/07/tnpsc-geography-questions-and-answers.html
1. சுற்றுப்புறச் சுழலை அறிய உதவும் புவியின் பகுதிகள் எவை?
பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிக்கோளம் மற்றும் உயிர்க்கோளம்
2. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், காலநிலை, பாறைகள் மற்றும் மண் ஆகிய
காரணிகளிடையே செயலெதிர்ச் செயல்கள் நடைபெறுவது எது?
புவியியலில் ஒரு பொதுத் தொகுதி
3. பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி எவற்றிற்கு வித்திட்டது?
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டது
4. இயற்கையான சுற்றுப்புறச் சூழலுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பு ரீதியான மாற்றங்கள் எவை?
(1) உணவு சேகரித்தல் மற்றும் வேட்டையாடுதல் காலம்
(2) வளர்ப்பு விலங்குகள் மற்றும் மேய்ச்சல் காலம்
(3) வளர்ப்புப் பயிர்கள் மற்றும் வேளாண்மைக் காலம்
(4) அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்மயமாதல் காலம்
5. இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த மனிதர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
இயற்கையின் மக்கள்
6. சுற்றுப்புறச் சூழலை மனிதர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக்
கொள்ள முக்கியமான சக்திகளில் ஒன்று எது?
நெருப்பு
7. பண்டைய மனிதர்கள் எதற்காக விலங்குகளை வீடுகளில் வளர்க்கக் கற்றுக் கொண்டனர்?
சுயதேவைக்கு
8. மனிதர்களிடையே சமுதாய வாழ்வு மலர தூண்டுகோலாக அமைந்தன எவை?
வளர்ப்பு விலங்குகள்
9. மனிதர்களின் நடவடிக்கைகளினால் சுற்றுச்சூழலின் மீது திணிக்கப்பட்ட மாற்றங்கள்
அனைத்தும் எந்த வரையறைக்குள் அமைந்திருந்தன?
இயற்கையின் சுய ஒழுங்கு முறை இயக்கம்
10. சுற்றுப்புறச் சூழலின் ஒரு பகுதியான உயிரினங்களைக் கட்டுப்படுத்தும் மனிதத்
திறமைகளுக்கு ஒரு மைல்கல்லாக கருதப்படுவது எது?
தாவரங்களை வளர்ப்புப் பயிர்களாக மாற்றியமைத்தது
11. மனித சமுதாயத்தில் பழமையான வேளாண்முறைகளும் இடப்பெயர்வு வாழ்க்கை
முறைகளும் தோன்ற எது தூண்டுகோலாக அமைந்தன?
வளர்ப்புப் பயிர்கள்
12. முந்தைய நாகரிகங்கள் தோன்றியதற்கு அடிப்படையாக விளங்கியது எது?
“ஆற்றங்கரை நாகரிகங்கள்”
13. வேளாண்மை காடுகளின் அழிவிற்கு முக்கிய காரணம் எது?
பழமையான வேளாண்முறைகளில் ஒன்றான இடப்பெயர்வு